Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்குவா படம் எப்போது ரிலீஸ்?... ஞானவேல் ராஜா போடும் திட்டம்!

vinoth
சனி, 7 செப்டம்பர் 2024 (08:51 IST)
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும்  கங்குவா படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

படம், திரையரங்குகளில் 10 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸ் அக்டோபர் 10 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு, ஆனால் அதே தேதியில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸாவதால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இன்னும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கங்குவா படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நேர்காணலில் பேசும்போது “கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம். வட இந்தியாவில் அதிக மல்ட்டிபிளக்ஸ் திரைகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விரும்புகிறோம். அதற்கு போட்டியில்லாத ஒரு தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஹாலிவுட் படங்கள் எதுவும் வராத ஒரு நாளில் படத்தை ரிலீஸ் செய்வோம். கண்டிப்பாக இந்த ஆண்டில் கங்குவா ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments