அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லிஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜானில் நடந்தது.
அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அஸர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கோடு படத்தின் மொத்தக் காட்சிகளும் படமாக்கப்பட்டு நிறைவடையும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் 1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற ஆக்ஷன் படத்தைதான் அதிகாரப்பூர்வமாக ரீமேக் உரிமை பெற்று விடாமுயற்சி படத்தை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.