கூகுள் மருத்துவ நிபுணர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி டூடுல் வைத்துள்ளது. 
	
 
									
										
								
																	
	 
	இந்தியாவில், கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்தது, இறப்பு எண்ணிக்கை 308 ஐ எட்டியது. கொரோனா வைரஸ் நான்கு நாட்களில் குறைந்தது 80 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	கொடிய கொரோனா வைரஸ் வெடிப்பின் கீழ் உலகம் திணறும்போது, நிபுணர்களின் தன்னலமற்ற சேவையை செய்து வருகின்றனர். எனவே இதனை பாராட்டும் விதமாகவும் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி என டூடுல் கூறுகிறது. 
	 
 
									
										
			        							
								
																	
	மேலும், அதன் முகப்புப்பக்கத்தில் வண்ணமயமான டூடுலில் ஒரு இதய ஈமோஜியும் உள்ளது, இது இந்த நோயைக் கட்டுப்படுத்த போராட்டத்தில் உதவி செய்பவர்களுக்கு ஆகும்.
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	அடுத்த இரண்டு வாரங்கள் கூகுள் கொரோனா வைரஸ் போராளிகளை தொடர்ச்சியாக டூடுல் மூலம் கவுரவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம், Stay Home, Save Life என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.