பிரபல நடிகை கங்கனா ரனாவத் காதலர் தினத்தில் புதிய தொழில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா, தமிழில் தலைவி சந்திரமுகி 2 உள்பட ஒரு சில படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் அரசியல்வாதியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அவர் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இமயமலை பகுதியில் ஒரு உணவகத்தை கங்கனா திறக்க உள்ளார். பிப்ரவரி 14ஆம் தேதி அந்த ரெஸ்டாரன்ட் திறக்கப்படும் என்றும் தனது சிறு வயது கனவு நிறைவேற இருப்பதாகவும், அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த உணவகத்தின் முதல் வாடிக்கையாளராக தீபிகா படுகோனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் உணவகத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தீபிகா படுகோன், "கங்கனா உணவகத்தில் நான் தான் முதல் வாடிக்கையாளர் என்பதில் எனக்கு பெருமை," என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோவை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.