Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் காளி வெங்கட்டின் தாயார் காலமானார்!

Advertiesment
நடிகர் காளி வெங்கட்டின் தாயார் காலமானார்!

vinoth

, வியாழன், 6 பிப்ரவரி 2025 (11:11 IST)
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார் காளி வெங்கட். 2010 ஆம் ஆண்டு அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் அவர் முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் திருப்புமுனையைப் பெற்றார்.

தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் மட்டும் நடித்து வந்த அவர் கார்கி படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் அவரது தாயார் விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 72. விஜயலட்சுமி அவர்களின் உடலுக்கு சென்னையில் உள்ள காளி வெங்கட்டின் வீட்டில் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடக்க, திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் டைனோசர் தீவுக்குள் நுழையும் புது டீம்..! இந்த தடவை வேற சம்பவம்! - Jurrasic World Rebirth தமிழ் ட்ரெய்லர்!