Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

vinoth
வியாழன், 9 ஜனவரி 2025 (12:54 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் படம் ரிலீஸ் தேதி சில முறை அறிவித்தும் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்த படம்  சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான ஜி ஸ்டியோஸ் மற்றும் கங்கனா ஆகியோர் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதன் பின்னர்தான் படத்துக்கு சென்சார் வாங்கப்பட்டது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கங்கனா ரனாவத் இந்த படத்தைப் பார்க்க காங்கிரஸ் எம் பி பிரியங்கா காந்தியை அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் “நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்த போது அவரை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்தேன். அவரும் வருவதாக சொல்லியுள்ளார். அவர் படம் பார்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

நான் இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

மாதவன் நடிக்கும் வெப் சீரிஸை தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

விஷால் ஏன் இப்படி இருக்கிறார்?... நெருங்கிய நண்பரான விச்சு விஸ்வ்நாத் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments