Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

Prasanth Karthick
வியாழன், 9 ஜனவரி 2025 (12:30 IST)

நாளை ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படம் ரிலீஸாகும் நிலையில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் நிரம்பாமல் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் நாளை இந்தியா முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்த நிலையில், அவையும் சரிசெய்யப்பட்டு தற்போது கேம் சேஞ்சர் படத்திற்கான புக்கிங் தொடங்கியுள்ளது.

 

ஆனால் முக்கிய நகரங்களிலேயே கேம் சேஞ்சர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் மிகவும் சொற்பமாக நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கி முன்னதாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் தந்த ஏமாற்றத்தின் காரணமாக பார்வையாளர்கள் கேம் சேஞ்சர்க்கு பெரிய ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
 

ALSO READ: விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

 

அதேசமயம் மற்ற ஷங்கர் படங்கள் அளவுக்கு இந்த படத்திற்கு தமிழில் ப்ரோமோஷன் அவ்வளவாக இல்லை என்றும், நேரடி தமிழ் படம் இல்லை என்பதால் வரவேற்பு குறைவாக இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது. எப்படி இருந்தாலும் நாளை வெளியாகி படம் நல்ல விமர்சனங்களை எதிர்கொண்டால் சனி, ஞாயிறுகளில் படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

 

இந்தியன் 2 தோல்வியில் உள்ள ஷங்கருக்கு ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை இப்படிப் பார்க்க சந்தோஷமாகதான் இருக்கு… பாடகி சுசித்ரா தடாலடி!

நான் இளமையாக இருப்பதற்கு அதுதான் காரணம்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

மாதவன் நடிக்கும் வெப் சீரிஸை தயாரிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

விஷால் ஏன் இப்படி இருக்கிறார்?... நெருங்கிய நண்பரான விச்சு விஸ்வ்நாத் அளித்த பதில்!

மேலும் 20 நிமிடத்தைச் சேர்த்த புஷ்பா 2 படக்குழு…!

அடுத்த கட்டுரையில்
Show comments