Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவோம்… நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தகவல்!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:42 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் படம் ரிலீஸ் தேதி சில முறை அறிவித்தும் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்த படம்  சென்சார் பிரச்சனையில் சிக்கி ரிலிஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் சில தடவை அறிவிக்கப்பட்டு தாமதம் ஆன நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களான ஜி ஸ்டியோஸ் மற்றும் கங்கனா ஆகியோர் சிக்கலில் மாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் “விரைவில் ஹரியானாவில் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு சீக்கியர்கள் வாக்கு கிடைக்காது என்பதால் இந்த படத்துக்கு சென்சார் கிடைக்கவிடாமல் பாஜக தாமதப்படுத்துகிறது.” என வெளிப்படையான குற்றச்சாட்டை வைத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர், நடிகரான கங்கனா ரணாவத்  பாஜக எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் சென்சார் போர்டு சம்மந்தமாக ஆஜரான வழக்கறிஞர் அபினவ் பேசும்போது “சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லியுள்ளது. தேவையான மாற்றங்கள் செய்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக முடிவெடுக்க ஜி ஸ்டுடியோஸ் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments