Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக வருகிறாரா இந்திரா காந்தி!

கார்த்தியின் சர்தார் 2 படத்தில் முக்கியக் கதாபாத்திரமாக வருகிறாரா இந்திரா காந்தி!

vinoth

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (09:05 IST)
கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்குள் பல முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் படமாக்கவுள்ளாராம். படம் வெளியாகும் போது இதில் படமாக்கப்படும் காட்சிகள் பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

அதே போல கதையில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஒரு முக்கியமாகப் பாத்திரத்தில் வருகிறாராம். அதற்காக இந்திரா காந்தி போன்ற தோற்றம் கொண்ட பெண் ஒருவரை மேக்கப் உதவியுடன் நடிக்கவைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கங்கனா ரனாவத் இந்திராகாந்தி வேடத்தில் நடித்தில் எமர்ஜென்ஸி என்ற திரைப்படத்தில் நடித்து, அதை இயக்கியுமுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு சினிமா சான்ஸே கிடையாது! - தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி முடிவு!