Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகாவால் என் தாயின் இதய அறுவை சிகிச்சையை தவிர்த்தேன்… கங்கனா அடுத்த சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (16:05 IST)
யோகா செய்ததன் மூலமாக தனது தாயின் இதய அறுவை சிகிச்சையை தவிர்த்ததாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய கொரோனா நிலவரம் குறித்து பாப் பாடகி ரிஹானா பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு முதலாக அடிக்கடி இவரது ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதே போல மும்பை மாநில அரசோடு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவர் மேல் மும்பை போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். அதில் ‘என் அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய இருந்த போது, என் கண்களில் கண்ணீரோடு உன் இரண்டு மாதங்களை எனக்குக் கொடு.. ஏனென்றால் உன் இதயம் கிழுக்கப்படுவதை நான் விரும்பவில்லை என்று கூறினேன். அடுத்த இரண்டு மாதங்களில் எந்த மருந்துகளும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. யோகா செய்து குணமானார். அதே போல என் தந்தைக்கு காலில் மூட்டு உடைந்தபோதும் அதை யோகா மூலமாக குணமாக்கினேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

தமிழ் நாடு முழுக்க ரிலீஸுக்கு முன்பே பிரிமியர் ஷோ.. குட் பேட் அக்லி படக்குழு எடுத்த முடிவு!

சினிமாவும், சூதாட்டமும் ஒரே பிரிவில்.. பஸ் பிடித்து Finance Ministerஐ பார்ப்பேன்! - நடிகர் விஷால் பேட்டி!

விஜய்யின் கடைசி படம் ரிலீஸ் தள்ளிப் போக நெட்பிளிக்ஸ்தான் காரணமா?

விடாமுயற்சி டிரைலரின் BTS காட்சிகளை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments