Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டை இடித்ததற்காக கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்கும் கங்கனா: பரபரப்பு தகவல்

Advertiesment
வீட்டை இடித்ததற்காக கோடிக்கணக்கில் இழப்பீடு கேட்கும் கங்கனா: பரபரப்பு தகவல்
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:01 IST)
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக சுஷாந்த் சிங் விவகாரத்தில் அவரது ஒவ்வொரு டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி பாலிவுட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு திடீரென கங்கனா ரனாவத் வீடு மற்றும் அலுவலகத்தில் ஒரு பகுதியை இடித்ததை அடுத்து, கங்கனா ரணவத் நீதிமன்றம் சென்றதை அடுத்து நீதிமன்ற உத்தரவால் அவரது வீடு இடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டது 
 
இந்த நிலையில் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் சட்டத்துக்கு முரணாக விதிகளை மீறி இடித்ததாக கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இதற்காக மகாராஷ்டிர மாநில அரசு தனக்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை மகாராஷ்டிர அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசிடம் இழப்பீடு கேட்டு முன்னணி நடிகை நீதிமன்றத்தில் மனு !