பாதிப்பில் ரஷ்யாவையும், மரணத்தில் ஸ்பெயினையும் முந்திய மகாராஷ்டிரா
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பத்திலிருந்தே கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பாதித்தவர்களை விட அதிகமாகி உள்ளது என்பது அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320 என்ற நிலையில் அதைவிட அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 10,77,374 பேர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
அதேபோல் மகாராஷ்டிராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848 என்ற நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 29,894 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
உலக நாடுகளை விட இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலத்தில் கொரோனா அதிகமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது