Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கந்து வட்டி கொடுமை; இதயம் வலிக்கிறது - நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட்

Advertiesment
கந்து வட்டி கொடுமை; இதயம் வலிக்கிறது - நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட்
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:05 IST)
நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் இரு குழந்தைகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும்,  குழந்தைகளின் தாய் சுப்புலட்சுமியும் மரணம் அடைந்தனர். சுப்புலட்சுமியின் கணவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் ஒரு குடும்பம் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை தவிர தாயும், குழந்தைகளும் பலி. தீயை அணைக்க மண்ணை தவிர எதுவும் இல்லை. இதயம் வலிக்கிறது என்று ராதிகா சரத்குமார்  ட்வீட்டியுள்ளார்.

webdunia
 
தொகுப்பாளினி டிடி தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், அவர்கள் செய்யாத தவறுக்கு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அடைந்த வேதனையை நினைத்தால் தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

webdunia


webdunia
 
ராதிகா ட்வீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பட்டப்பகலில் விசாகப்பட்டினத்தில் 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த உலகம் எங்கே போகிறது? ஆட்டோ டிரைவர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.40 லட்சம் மதிப்பில் தனக்குத்தானே தீபாவளி பரிசு பெற்றுக்கொண்ட மாதவன்