Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:21 IST)
நீதிமன்ற விசாரணையில் இருதரப்பு விவாதங்களும் கேட்கப்பட்ட பின்னர் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களில் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் கனல் கண்ணன் மீது போலீஸார் ஒரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘கனல் கண்ணன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளதாக’ கூறி அவரின்  முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்: இதுதான் கதையாம்!