Publish Date: Fri, 25 Mar 2022 (14:51 IST)
Updated Date: Fri, 25 Mar 2022 (14:54 IST)
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாத மீரா மிதுனை போலிஸார் கைது செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் கடந்த சில மாதங்களுக்க முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து அவரை கைது செய்து ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதையடுத்து இப்போது போலிஸார் மீரா மிதுனை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.