Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்புச் செழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்… முதல் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

அன்புச் செழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் படம்… முதல் லுக் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

vinoth

, செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (14:31 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்த பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கி வருகிறார். முதல் படம் வெளியாகி 6 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தை ஆனந்த் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை நாளை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தியன் தாத்தா ஓவியங்கள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!