Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தம வில்லன் படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தது உண்மை… லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் அறிக்கை!

vinoth
வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:40 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன் . கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தால் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இன்னும் அவர்களால் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவரமுடியவில்லை.

இந்நிலையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது உத்தம வில்லன் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “தீபாவளி, பையா, வேட்டை, இவன் வேற மாதிரி, வழக்கு எண் 18/9, கும்கி. கோலிசோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை . ரஜினிமுருகன் போன்ற தரமான மிகப்பெரிய வெற்றி படங்களையும், தேசிய விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளையும் பெற்ற படங்களை தயாரித்து வெளியிட்ட எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான்.

பத்மஸ்ரீ திரு கமலஹாசன் அவர்களை வைத்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த திரைப்படமான “உத்தம வில்லன்" எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படமாகும். இது திரு.கமலஹாசன் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

"உத்தம வில்லன்" திரைப்படத்தின் மிகப்பெரிய நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக திரு.கமல்ஹாசன் அவர்களும் அவரது சகோதரர் அமரர் திரு.சந்திரஹாசன் அவர்களும் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

அதற்குண்டான வேலைகளில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான "வலை பேச்சு" என்கிற யூடியூப் சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர் திரு லிங்குசாமி கூறியதாக 17-04-2024 அன்று தவறான தகவல்களை கூறியுள்ளனர் . இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி.. தியேட்டரில் அதிரடி கைது..!

வெற்றிமாறனை இயக்குனர் சிகரம் என வர்ணித்த வன்னி அரசு.. கே பாலசந்தர் ரசிகர்கள் கொந்தளிப்பு..!

பெண் இறந்த செய்தி அறிந்தும் தியேட்டரில் இருந்து வெளியேற மறுத்தார் அல்லு அர்ஜுன்… தெலங்கானா போலீஸ் குற்றச்சாட்டு!

இந்திக்கு செல்லும் ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

அடுத்த கட்டுரையில்
Show comments