Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கில்லிக்கு போட்டியாக இறங்கும் மங்காத்தா.. ரீ ரிலீஸிலும் போட்டியா?

Prasanth Karthick
வியாழன், 18 ஏப்ரல் 2024 (09:31 IST)
நாளை மறுநாள் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் ஆகும் நிலையில் அதை தொடர்ந்து அஜித்தின் ‘மங்காத்தா’ படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.



சமீபமாக தமிழ் சினிமாவில் பெரிய ஸ்டார்கள் படம் எதுவும் ரிலீஸ் ஆகாமலே இருந்து வருகிறது. கடந்த பல மாதங்களாக பெரிய படங்கள் எதுவும் வராத சூழலில் மலையாள படங்களும், ரீ ரிலீஸ் படங்களும் திரையரங்குகளை நிரப்பி வருகின்றன.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து 2004ல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் கில்லி. தற்போது கில்லி வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் பல தியேட்டர்களில் கில்லி படம் வெளியாகிறது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் கில்லி படத்தை மீண்டும் தியேட்டரில் பார்க்க ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.

ALSO READ: டிஸ்னி ஹாட்ஸ்டார் சுவையுடன் பரிமாறும்,அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், 'உப்பு புளி காரம்'

அதை தொடர்ந்து தற்போது மே 1ம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவரது 50வது படமும், இண்டஸ்ட்ரி ஹிட் படமுமான மங்காத்தா ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்குமார் சமீபமாக ஒவ்வொரு படத்திற்கும் இடையே அதிக இடைவெளி எடுப்பதால் அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் பட அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் மங்காத்தா ரீ ரிலீஸ் அறிவிப்பு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே நாயகி த்ரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக அஜித் – விஜய்யின் புதிய படங்கள் வராவிட்டாலும் கில்லி – மங்காத்தா மூலமாக மீண்டும் ரீ ரிலீஸில் ஒரு போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments