Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்புவின் ஷூட்டிங் தொடங்கியது!

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்புவின் ஷூட்டிங் தொடங்கியது!

vinoth

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (08:13 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. ராஜ்ஸ்தானில் நேற்று அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் மணிரத்னம் படமாக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் கால்ஷீட்டைப் பெற்ற பிரபல தயாரிப்பாளர்… இயக்குனர் யார்?