வினோத் படத்துக்கு முன்பாக கமல்ஹாசன் நடிக்கும் படம்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (10:24 IST)
நடிகர் கமல்ஹாசனின் மார்க்கெட்டை கடந்த ஆண்டு ரிலீஸான விக்ரம் திரைப்படம் தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து அவர் படங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து வினோத் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் முதலில் வினோத் இயக்கும் படம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது முழு திரைக்கதையும் கமல்ஹாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் படித்த கமல்ஹாசன் திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளதாகவும், அதற்கான பணிகளில் இப்போது வினோத் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் வினோத் படத்துக்கு முன்பாக, கமல்ஹாசன் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments