Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2000 டான்சர்களோடு லியோ பட பாடல்… லேட்டஸ்ட் அப்டேட்!

2000 டான்சர்களோடு லியோ பட பாடல்… லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 14 ஜூன் 2023 (09:06 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்காக பிரம்மாண்டமான பாடல் ஒன்றை படமாக்கி வந்தது படக்குழு. அந்த பாடலில் சுமார் 2000 டான்ஸர்கள் ஆட உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்த  இப்பாடல் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் முடிந்துள்ளது.

இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலில் விஜய்யுடன், மடோன்னா செபாஸ்டியன், அர்ஜுன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் நடனமாடியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமார் இயக்கி நடிக்கும் குற்றப் பரம்பரையில் பிரபல தெலுங்கு ஹீரோ!