Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

40 நாட்கள் கால்ஷீட்....தட்டித் தூக்கறோம்...கமலுடன் கைகோர்த்த ஹெச்.வினோத்

kamalhasan h vinoth
, செவ்வாய், 13 ஜூன் 2023 (18:48 IST)
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்குப் பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் கமல்234 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

நாயகன் படத்திற்குப் பின் இரு லெஜண்டுகளும்  மீண்டும் இணைவதால், இப்படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத், கமல்ஹாசனின் 233 படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

 இப்படம் விவசாயம் தொடர்பான படமாக இருக்கலாம் என்றும் இப்படத்திற்கு கமலிடம் 40 நாட்கள் வினோத் கால்ஷீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென அடி ஆட்களுடன் திவ்யா வீட்டிற்கு சென்ற அர்னவ் - பரபரப்பு சம்பவம்!