Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பிஸ்னஸில் விஜய்யை முந்திய கமல்… தக் லைஃப் விலை இத்தனை கோடியா?

vinoth
புதன், 15 மே 2024 (06:50 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

படத்தில் சிம்பு இணைந்ததை படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோ வெளியிட்டு அறிவித்தது. தக்லைஃப் படத்தை தயாரித்து வரும்  ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் பிஸ்னஸ் தொடங்கியுள்ளனர். படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.  இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை 63 கோடி ரூபாய்க்கு இவ்விரு நிறுவனங்களும் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜய்யின் லியோ படத்தின் பிஸ்னஸை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இதுவரை வந்த தமிழ் சினிமாக்களில் லியோ படம்தான் அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments