உத்தம வில்லன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசன் வராததை அடுத்து அவருக்கு ரெட் கார்ட் விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் திரைப்படம் கலந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
அந்த நஷ்டத்தை சரிக்கட்ட தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த கமலஹாசன் அந்த வாக்குறுதியை 9 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை என்று இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் அடிப்படையில் இன்று கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கமலஹாசன் வரவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக ரெட் கார்டு விதிக்க வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் கூறி வருவதாக தகவல் கசிந்துள்ளது.