Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியால் தாமதம் ஆகிறதா விடுதலை 2?

vinoth
புதன், 15 மே 2024 (06:49 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன் ‘விடுதலை 2 இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்த 20 நாட்களும் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க உள்ளாராம். அதற்காக மொத்தமாக 20 நாட்கள் அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளாராம். ஆனால் அவரால் அப்படி தேதி ஒதுக்க முடியாததால் ஷூட்டிங் தாமதமாகிக் கொண்டிருக்கிறதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments