Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கே வாரத்தில் நெட்ளிக்ஸில் சத்தமில்லாமல் ரிலீஸானது ‘தக் லைஃப்’…!

vinoth
வியாழன், 3 ஜூலை 2025 (10:56 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது. உலகளவில் இந்த படம் 100 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பாக ஓடிடி தளங்களில் 8 வாரங்கள் கழித்துதான் ரிலீஸாகும் எனக் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் நெருக்கடிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கமல்ஹாசன் நான்கே வாரங்களில் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவை எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாரா ஸ்ருதிஹாசன்?

இந்த வார சினிமா.. நாளை ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ்!

ப்ரமோஷனலில் ஆட்டிட்யூட் காட்டிய சூர்யா விஜய் சேதுபதி?... வீடியோக்களை நீக்க மிரட்டலா?

விஜய் தொலைக்காட்சிக்குக் கைமாறும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

படத்தைப் படமாக மட்டும் பாருங்கள்.. ‘அனிமல்’ குறித்த சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தனா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments