Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

vinoth
வியாழன், 12 ஜூன் 2025 (09:58 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது.இந்திய அளவில் இந்த படம் இன்னும் 50 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் காட்சிகளுக்குப் பாதிக்கும் மேல் குறைந்துள்ளன. முதல் நாளில் இந்த படத்துக்கு சுமார் 4900 காட்சிகள் திரையிடப்பட்டன. இப்போது இரண்டாவது வாரத்தில் 2100 காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகின்றன. விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்களால் ரசிகர்களின் வருகைக் குறைந்துள்ளதால் இந்த படத்துக்குக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments