Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

vinoth
சனி, 22 மார்ச் 2025 (07:07 IST)
பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இது சம்மந்தமான ப்ரோமோ வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் மணிரத்னம், ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தலைமறைவான நடிகர் கிருஷ்ணா.. ஒரே நாளில் தனிப்படையிடம் சிக்கி கைது.. தீவிர விசாரணை..!

ஹாலிவுட் படத்தில் நடிகை வரலட்சுமி.. சவுதி அரேபியாவில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை..!

நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

சினிமாவில் அறிமுகமாகும் தேவயானி மகள்.. தியாகராஜன் - பிரசாந்த் கொடுக்கும் வாய்ப்பு..!

அஜித்தை சந்திக்க துபாய் செல்கிறாரா தனுஷ்? கதை ஓகே ஆனால் எப்போது படப்பிடிப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments