பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு கமர்ஷியல் வெற்றியைப் பெற்ற இயக்குனர் மணிரத்னம் அடுத்து இப்போது கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை இயக்ககியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ரிலீஸானது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் “நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணைந்து படம் பண்ணாதது என்னுடைய தவறு. அந்த தவறை சரி செய்தவர்கள் நீங்கள். எங்களுக்குள் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசியவற்றில் 25 சதவீதத்தைதான் பண்ணியுள்ளோம். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.