Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

Advertiesment
அஜித்

Siva

, வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (19:32 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ்  விமர்சனங்கள் பெற்றுள்ளன.
 
இந்த நிலையில் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிம்ரன் மீண்டும் அஜித்துடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு சப்ரைஸாக அமைந்துள்ளது. 'வாலி', 'அவள் வருவாளா', 'உன்னை கொடு என்னை தருவேன்' போன்ற வெற்றிப் படங்களுக்கு பிறகு, இருவரும் தற்போது ‘குட் பேட் அக்லி’யில் மீண்டும் இணைந்துள்ளனர்.
 
சிம்ரன், இந்த அனுபவத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு இதுதான்:
 
"Special appearance என்று தான் வந்தேன். ஆனால், இப்படத்தின் மூலம் அஜித் சாரின் அன்பையும் ஆதரவையும் பெற்றேன். அவருடன் மீண்டும் பணியாற்றிய அனுபவம் முழுமையாக ஒரு ப்ளாஸ்ட்! இப்படம் எனக்குக் கொண்டுவந்த அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவுக்கு மனமார்ந்த நன்றி!"
 
இப்போதைக்கு, 'குட் பேட் அக்லி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் நல்லபடியே கிளிக் ஆன இந்த படம், வரும் நாட்களில் எவ்வாறு வசூலை குவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!