Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல் மணிரத்னம் படத்தின் ஷூட்டிங் தொடக்கம் & ரிலீஸ் ப்ளான் இதுதான்!

கமல் மணிரத்னம் படத்தின் ஷூட்டிங் தொடக்கம் & ரிலீஸ் ப்ளான் இதுதான்!
, திங்கள், 11 டிசம்பர் 2023 (07:04 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல் 234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஹிட்டானது.

இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகையான அபிராமி இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதே போல கௌதம் கார்த்திக்கும் ஒரு வேடத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் படத்தின் ரிலீஸ் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை லேடி சூப்பர் ஸ்டார்னு சொன்னா திட்டுறாங்க… நயன்தாரா ஆதங்கம்!