Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

18 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம்!

18 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ள ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படம்!
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:21 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்கி வருகிறார். 

ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படம் 18 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இந்த படம் இருக்கும் என்பதால் இத்தனை மொழிகளில் ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் தொடர்!