Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் மணிரத்னம் படத்தில் இணையும் 8 ஹீரோக்கள்… லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (09:01 IST)
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணையும் படம் எதிர்பார்த்ததை விடவும் சீக்கிரமே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்துக்காக கமல்ஹாசன் இரண்டாவது முறையாக தேசிய விருதைப் பெற்றது.

படம் ரிலீஸ் ஆன போது கிடைத்த வரவேற்பை விட நாளாக ஆக அந்த படத்தின் மதிப்பு நாளுக்கு நாள் கூடி, இக்காலத்தைய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து ஒரு கல்ட் திரைப்படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

அந்த படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து மேலும் 8 ஹீரோக்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 8 ஹீரோக்களும் வெவ்வேறு மாநில முன்னணி நடிகர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments