Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முக அழகிரி - உதயநிதி சந்திப்பால் பாலாறு, தேனாறு ஓடப்போகிறதா? செல்லூர் ராஜூ

Advertiesment
sellur raju
, செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:07 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளதை அடுத்து இந்த சந்திப்பால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓட போகிறதா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா முக அழகிரியை சந்தித்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெரியப்பா அழகிரியை சந்தித்து ஆசி பெற்றேன் என்று கூறினார். 
 
இந்த நிலையில் முக அழகிரி - உதயநிதி சந்திப்பு குறித்து கருத்து கூறிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உதயநிதி முகஅழகிரி சந்திப்பால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா என்று கேள்வி எழுப்பினார். 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் அதிமுகவினரும் தயாராக உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
எம்ஜிஆரை பெரியப்பா என அழைக்கும் மு க ஸ்டாலின் மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் எம்ஜிஆருக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா மேல் போர் தொடுத்து ரொம்ப கஷ்டப்பட்டோம்! – ஓபனாக சொன்ன பாகிஸ்தான் பிரதமர்!