கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்தியா கூட்டணியில் அங்கமாக இருக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த தொகுதிகளும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ராஜ்ய சபா எம் பி பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் மே 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏப்ரல் இறுதியில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.