Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் இந்த நடிகரா? லேட்டஸ்ட் தகவல்!

தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் இந்த நடிகரா? லேட்டஸ்ட் தகவல்!

vinoth

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (14:28 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பல படங்களில் நடித்து வரும் அவரால் தொடர்ச்சியாக இந்த படத்துக்காக தேதிகள் ஒதுக்க முடியாததால் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதில் சிம்பு இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல இந்த படத்துக்காக ஜெயம் ரவி ஒதுக்கிய தேதிகளில் மணிரத்னத்தால் அவரை வைத்து ஷூட் செய்ய முடியவில்லையாம். அதனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக இப்போது அருண் விஜய் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 மொழிகளில் வெளியாகும் ராஷ்மிகாவின் புதிய பட டீசர்..!