“மகாநதியை விட எனக்கு சித்தா படம் பிடித்திருக்கிறது..” – கமல்ஹாசன் பாராட்டு!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:20 IST)
கடந்த சில வருடங்களாக சித்தார்த் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகனாக நடித்து தயாரித்து சில மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் காத்திருந்த சித்தா திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த கமல்ஹாசன் அதைப் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் “நான் சித்தா படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு அம்மா என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவர்கள் மனதில் பதிய ஒரு கதை சொல்லவேண்டும்.  இறுதியில் அழுத்தத்தோடு செல்லாமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சொல்லி இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்ற வித்தியாசம் இல்லாமல் அவர்களை நாம் குழந்தைகளாகவே பார்க்கவேண்டும். இந்த படத்துக்கு மகாநதி படம்தான் ஒரு உந்துதல் என்று படக்குழுவினர் சொன்னார்கள்.அப்படி என்றால் எனக்கு மகாநதியை விட இந்த படம் பிடித்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments