நடிகர் கமல்ஹாசன் இன்று ரசிகர்களுடன் ரத்த தான அமைப்பைத் தொடங்கும் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 13 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று kamal blood commune என்ற அமைப்பைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல் மறைமுகமாக விக்ரம் படத்தின் வசூல் பற்றி பேசியுள்ளார். அதில் “என்னை நடிக்க விட்டா 300 கோடி சம்பாதிப்பேன். அத சொன்னா இங்க பாருங்க மார்தட்டிக்குறார்னு சொன்னாங்க. தோ வந்துட்டுருக்கு (விக்ரம் படத்தின் வசூல்). என்ன சம்பாதிக்க விட்டீங்கன்னா, என் கடன அடைப்பேன். என் வயிறாரா சாப்பிடுவேன். என்னால் முடிந்ததை என் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பேன். எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை” எனக் கூறியுள்ளார்.