Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’விக்ரம்’ வெற்றி: கமல்ஹாசனை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பிரபல நடிகர்!

Advertiesment
kamal chiranjeevi
, ஞாயிறு, 12 ஜூன் 2022 (12:13 IST)
’விக்ரம்’ வெற்றி: கமல்ஹாசனை வீட்டுக்கு அழைத்து விருந்தளித்த பிரபல நடிகர்!
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து அவருக்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது சமீபத்தில் ’விக்ரம்’ படம் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசனை வீட்டுக்கு வரவழைத்து அவருக்கு விருந்து அளித்துள்ளார். அவருடன் லோகேஷ் கனகராஜூம் சிரஞ்சீவி வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் ஐதராபத் படப்பிடிப்பில் இருந்த சல்மான்கானும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் சல்மான் கான் உள்ளிட்டோருக்கு விருந்தளித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் சிரஞ்சீவி பதிவு செய்துள்ளார்.
 
மேலும் சிரஞ்சீவி அதில் கூறியிருப்பதாவடு: விக்ரம் திரைப்படம் என்ன ஒரு அற்புதமான த்ரில்லிங் படம். உங்களுக்கு மேலும் மேலும் சக்தி கிடைக்க எனது வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் எனது அன்பான பழைய நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றும் விக்ரம் வெற்றிக்காக அவருக்கு விருந்தளித்ததும், இந்த விருந்தில் லோகேஷ் கனகராஜ் சல்மான்கான் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான கையோடு மன்னிப்பு கடிதம் எழுதிய விக்கி!