Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?
, வியாழன், 13 அக்டோபர் 2022 (16:20 IST)
கமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக KGF உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பணியாற்றிய அன்பறிவ் இரட்டையர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்க உள்ளதாகவும், படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவீரன் படத்தை குறுகிய நாட்களில் முடிக்கும் சிவகார்த்திகேயன்!