Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ''பிரின்ஸ்'' படத்திற்கு சென்சார் சான்றிதழ்!

prince
, புதன், 12 அக்டோபர் 2022 (18:52 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இயக்குனர் அனுதீப்  கே.வி இயக்கத்தில்,   நடிகர் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள படம் பிரின்ஸ்.  இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில்  சென்னையில்  நடந்தது. இந்த விழாவில் சிவகார்த்தியன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிம்பு தன் டுவிட்டர் பக்கத்தில் பிரின்ஸ் படக்குழுவினரைப் பாராட்டினார்.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ரிலீஸாக உள்ள  இப்படத்திற்கு இன்று சென்சார் போர்டு  ‘யு ‘சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம்  2 மணி நேரம் 23 நிமிடங்கள்  நிமிடங்கள் ரன்னிங் டைம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,

Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பொன்னியின் செல்வன்- 1 ''உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல்!