Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லைப் டைம் செட்டில்மெண்ட் லட்டர்: கமல் கடிதம் குறித்து லோகேஷ்

Advertiesment
lokesh
, திங்கள், 6 ஜூன் 2022 (22:48 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கமல்ஹாசன் தனது கைப்பட லட்டர் எழுதியுள்ளார். அந்த லெட்டரை life-time செட்டில்மெண்ட் என்று கூறிய லோகேஷ் அந்த லட்டரை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த லெட்டரில் கூறியிருப்பதாவது:
 
அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், பொதுவெளியில்,
 
என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம்.
 
உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம்.
 
இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நடிகரை திட்டிய பாடகி வைரலாகும் ஆடியோ