Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

சகோதரி சீமாவுக்கு என் அன்பும் அனுதாபமும்: ஐவி சசி மறைவு குறித்து கமல்ஹாசன்

Advertiesment
iv sasi
, செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:48 IST)
உலக நாயகன் கமல்ஹாசனும் மறைந்த இயக்குனர் ஐவி சசியும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பது இருவருக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இருவரும் இணைந்து குரு, அலாவுதீன் அற்புத விளக்கு, ஈட்டா, விருதம், ஆனந்தம் பிரம்மானந்தம் போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளனர்.



 
 
இந்த நிலையில் ஐவி சசியின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். , 'நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும், குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்' என்று கமல்ஹாசன் உருக்கத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
 
கமல்ஹாசனும் நடிகை சீமாவும் ஒருசில மலையாள படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சலுக்கு டிக்கெட் இலவசம் ; ஓபிஎஸ் கூட்டத்தை காலி செய்த தினகரன் ஆதரவாளர்