Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? இதோ உண்மை தகவல்

Advertiesment
samantha
, வியாழன், 24 நவம்பர் 2022 (12:17 IST)
பிரபல நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சிறிது மோசமாக இருப்பதாகவும் ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.
 
இந்த நிலையில் சமந்தா தரப்பினர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் சமந்தா வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவரது உடல் நலம் நல்ல படியாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர் 
 
எனவே சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளி வந்திருக்கும் தகவலை யாரும் நம்பவேண்டாம் என்றும் தயவு செய்து இந்த தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் சமந்தாவின் குழுவினர் தெரிவித்துள்ளனர்
 
இதனை அடுத்து சமந்தா உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறார் என்பது தெரியவருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த கர்சீப் எடுங்க மஜாவா இருக்கும் - ஐட்டம் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரௌடில்லா!