உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது என்பதும் கமல்ஹாசனின் 233 ஆவது படம் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் தற்போது டிராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலஹாசனுக்கு எச் வினோத் போலீஸ் கதை ஒன்றை சொன்னதாகவும் அது போன்ற கதையில் ஏற்கனவே பல படங்கள் நடித்து விட்டதால் மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்க தனக்கு விருப்பமில்லை என்று கமல் கூறியதாகவும் இதனால் கமல் - எச் வினோத் படம் டிராப் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க எச் வினோத் முடிவு செய்திருப்பதாகவும் கார்த்தி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் படத்தை எச் வினோத் இயக்கவில்லை என்றாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை அவர் இயக்குவார் என்றும் அந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது