உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 15 ஆண்டுகளில் மூன்றே வெற்றிப் படங்கள் மட்டும் தான் கொடுத்திருக்கிறார் என்றும், ஒரு மாபெரும் கலைஞனுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்றும் நிட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
கமல்ஹாசன் கடந்த 2010 லிருந்து 2025 வரை நடித்த படங்களில் மூன்று படங்கள் மட்டும் தான் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. ஒன்று 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம், அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு வெளியான பாபநாசம், அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம். இந்த மூன்று படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களும் அவருக்கு தோல்வியாகவே முடிந்துள்ளது.
2010 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்திலிருந்து உத்தம வில்லன், தூங்காவனம், விஸ்வரூபம் 2, இந்தியன் 2 ஆகிய படங்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தக்லைஃப் திரைப்படமும் தோல்விதான் அடையும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
கமல்ஹாசன் இனியாவது இளைய தலைமுறை திறமையான இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.