Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம்

கமல்ஹாசன் தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம்
, சனி, 20 ஜனவரி 2018 (15:03 IST)
இயக்குநர் ராஜேஷ்.எம்.செல்வா தூங்கா வனம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது, ராஜேஷ்.எம்.செல்வா இயக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த  தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.
 
இதை கமல்ஹாசனே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் பதிவு செய்து உறுதிபடுத்தியுள்ளார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்,  நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கமல் ட்வீட் செய்துள்ளார். அதில்....

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்; விஜய் சேதுபதி வேதனை