Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனும் பார்ட் 2 ராசியும்… நடக்குமா பாபநாசம் 2!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (12:53 IST)
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் பாபநாசம் 2 உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

நடிகர் கமல் அரசியல் தோல்விக்குப் பின்னர் படங்களில் வரிசையாக கவனம் செலுத்த உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அவர் ஒத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் இருக்கையில் இப்போது அவர் வேறொரு படத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திருஷ்யம் 2 படம்தானாம். இதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி கைவிடப்பட்ட மற்றும் ரிலீஸாகி ஏமாற்றம் அளித்த இரண்டாம் பாக படங்களின் ராசி பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 ஷுட்டிங் ஆரம்பித்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தேவர் மகன் 2 உருவாக்க கமல் விரும்பினார். அது இப்போது என்ன ஆனது என தெரியவில்லை. அதே போல தசாவதாரத்தின் ஒரு கதாபாத்திரமான பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை வைத்து சபாஷ் நாயுடு என்ற படம் இயக்க ஆரம்பித்தார். அதுவும் கைவிடப்பட்டது. விஸ்வரூபம் படத்தின் பார்ட் 2 வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது. இதனால் கமல்ஹாசன் பாபநாசம் 2 வில் நடிப்பாரா நடித்தாலும் வெற்றி பெருமா என்று பேச்சு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments