Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 19 February 2025
webdunia

கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது! – பிரதமர் மோடி யோகா தின வாழ்த்து!

Advertiesment
கொரோனா காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக உள்ளது! – பிரதமர் மோடி யோகா தின வாழ்த்து!
, திங்கள், 21 ஜூன் 2021 (09:49 IST)
இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி யோகா குறித்து பேசியுள்ளார்.

உடற்பயிற்சி கலையான யோகா பயிற்சி பல நாடுகளால் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று பல இடங்களில் யோகா தினத்தை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் பலர் யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் யோகா தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ள பிரதமர் மோடி “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இன்னும் குறையவில்லை என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி! புதிய தடுப்பூசி கொள்கை அமல்!