பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது எவிகிஷன் வாரமான இன்று கமல் பங்குபெற்றுள்ள ப்ரோமோ விடியோக்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.
சனி மற்றும் ஞாயிறு நாட்கள் கமல் தீர்த்து வைக்கப்போகும் பஞ்சாயத்தை தீர்க்க ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் டிவி முன்பு அமர்ந்து விட்டுவார்கள். ஆனால் இந்த வராம் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் தூக்கலாகவே இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடமும் சரி மக்களிடமும் சரி அதிக வெறுப்பை சம்மபதித்துள்ளவர் வனிதா.
ஆதலால் அவர் வீட்டை விட்டு இந்தவராம் வெளியேறவேண்டுமென மக்கள் கோஷமிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அபிராமியை குறை சொல்லும் வனிதாவுக்கு 'ஒருவர் பேசும் அளவுக்கு, மற்றவர்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்' என கமல்ஹாசன் அட்வைஸ் செய்து மூக்கை உடைத்துள்ளார்.
இதனால் அந்த அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது. எனவே இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கிறது.